உக்ரேனுக்கு வழங்கவிருந்த அமெரிக்க ஆளில்லா வானூர்தி விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

உக்ரேனுக்கு வழங்கவிருந்த நான்கு பெரிய ஆயுதமேந்திய ஆளில்லா வானூர்திகளை விற்கும் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிர்வாகம் நடத்திய ஆழமான மதிப்பாய்வின் போது விற்பனைக்கான ஆட்சேபனை எழுப்பப்பட்டது.

நாட்டின் பாதுகாப்புக் கருதி திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

உக்ரேனுக்கு நான்கு MQ-1C Gray Eagle ரக ஆளில்லா வானூர்தி விற்பனைத் திட்டத்தை அமெரிக்கா வகுத்துள்ளதாக Reuters செய்தி நிறுவனம் ஜூன் மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.

விமானத்தில் உள்ள ரேடார், அதிநவீன கண்காணிப்பு கருவிகள் ரஷ்யாவின் கைகளில் சிக்கினால் அது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும்.

இத்திட்டம் குறித்து மேலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள ரேடார், உணர்கருவித் தொகுப்பின் அதிநவீன ஆற்றலைக் குறைத்தால் மட்டுமே விற்பனைத் திட்டத்தை செயல்படுத்தமுடியும். இருப்பினும் அதற்குச் சில மாதங்கள் பிடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

seithimediacorp