“‘ஒர் அந்நிய அமைப்பு அந்தக் கசிவுகளை இதுகாறும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் பாங்க் நெகாரா ஊமையாகவும் செவிடாகவும் இருக்கிறது,”
லிம்: 150 மில்லியன் ரிங்கிட் இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
உங்கள் அடிச்சுவட்டில்: கள்ளத்தனமாக வெளியேறும் பணத்தை துல்லிதமாக கணக்கிடுவது சிரமம் தான். இல்லை என்றால் அதற்குக் கள்ளத்தனம் எனப் பெயரிடப்பட்டிருக்காது.
என்றாலும் வெளிவாணிக பற்று வரவு எப்படி உறுதி செய்யப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால் கள்ளத்தனமாக வெளியேறும் பணத்தை மதிப்பிட்டு விடலாம்.
நாம் நமது பொருள் ஏற்றுமதி இறக்குமதிகளையும் சேவைகளையும் துல்லிதமாகப் பதிவு செய்தால் வெளி வாணிகப் பற்றுவரவில் உள்ள நடப்புக் கணக்கில் உபரி அல்லது பற்றாக்குறையை தெரிந்து கொள்ள முடியும்.
நாம் நாட்டுக்குள் வரும் மூலதனத்தையும் வெளியே போகும் மூலதனத்தையும் துல்லிதமாகப் பதிவு செய்தால் மூலதனக் கணக்கில் உள்ள உபரி அல்லது பற்றாக்குறை தெரிந்து விடும்.
அந்த இரண்டு கணக்குகளும் (தவறுகளுக்கும் பிழைகளுக்கும் நியாயமான மதிப்பீடுகள் போக ) பாங்க் நெகாரா மலேசியாவின் அந்நியக் கையிருப்பில் உள்ள மாற்றங்களை தெளிவுபடுத்தி விடும்.
நமக்கு நடப்புக் கணக்கில் அதிகமாக உபரி இருந்து, நிறைய மூலதனம் நாட்டுக்குள் வந்திருக்கும் போது அந்நியச் சேமிப்புக்களில் அது பிரதிபலிக்கப்படா விட்டால் பணம் பெரிய அளவில் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என நாம் முடிவு செய்யலாம்.
நாம் ஜிஎப்ஐ (உலக நிதி நேர்மை அமைப்பு) வெளியிட்ட புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமானால் அதனை கணக்கிடுவதற்கு பின்பற்றப்பட்ட வழி முறைகளையே நாம் ஆராய வேண்டும்.
பாங்க் நெகாரா மலேசியா ஏன் மௌனமாக இருக்கிறது என்பதே என்னுடைய கேள்வி ஆகும்.
டொனால்ட் லிம் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவருக்குப் பொருளாதாரம் பற்றியும் வெளிவாணிகப் பற்று வரவு பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை.
கேஎஸ்என்: கள்ளத்தனமாக நாட்டை விட்டு வெளியேறிய அவ்வளவு பெரிய தொகை குறித்து நிதித் துணை அமைச்சர் அளிக்கும் விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது.
அது நமது பொருளாதாரத்தைப் பாதிக்கவில்லையா? பாங்க் நெகாரா மலேசியாவிடம் அந்த விஷயத்தைத் தள்ளி விட்டதின் மூலம் நிதி அமைச்சருமான பிரதமர், தமது பொறுப்புக்களை கைகழுவியுள்ளார். அதே வேளையில் பாங்க் நெகாரா எப்படி அது நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் தரவே இல்லை.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார்? அதனை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
நிதி அமைச்சர், இரண்டாவது நிதி அமைச்சர், பாங்க் நெகாரா கவர்னர், போலீசார் ஆகியோர் ஏன் மௌனமாக சாதிக்கின்றனர்? அதற்குப் பதில் அறிவுக்கு ஒப்பாத ஒர் அறிக்கையை விடுப்பதற்கு துணை அமைச்சர் ஒருவரை அனுமதித்தது ஏன்?
குவினி: லிம் அறிக்கை உப்புச் சப்பற்றது. அந்தக் கசிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. உண்மையில் அவை வெறும் கசிவுகள் அல்ல. ரத்தக் கசிவுகள்.
பல இனம்: என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்கள் போல அவர்கள் பேசுகின்றனர். ஊழலும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதும் கை கோர்த்துள்ளன என்பதே உண்மை.
ஜெடி_யார்: ஒர் அந்நிய அமைப்பு அந்தக் கசிவுகளை இதுகாறும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் பாங்க் நெகாரா ஊமையாகவும் செவிடாகவும் இருக்கிறது.
அந்தக் கசிவுகள் நிறுத்தப்படுவதோடு (அவர்கள் அதனைச் செய்கின்றார்களா என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது) குற்றவாளிகளும் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும்.