அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா – முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிக்கு வடகொரியா கண்டனம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையை வடகொரியா சாடியிருக்கிறது.

ஸ்பெயினில் நடைபெற்ற நேட்டோ கூட்டணியின் கூட்டத்தில் அந்த மூன்று நாடுகளும் அரிதாகத் தனிப்பட்ட சந்திப்பை நடத்தின.

முத்தரப்புக் கூட்டு ராணுவப் பயிற்சி பற்றி அந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.ஐரோப்பாவை ராணுவமயமாக்கி ரஷ்யாவையும், சீனாவையும் முடக்க அமெரிக்கா முயல்வதாக
வடகொரியா குற்றஞ்சாட்டியது. அதேபோன்ற முயற்சியை ஆசியாவிலும் மேற்கொள்ள வாஷிங்டன் திட்டமிடுவதாக பியோங்யாங் குறிப்பிட்டது.

ஜப்பான், தென் கொரியாவுடன் அமெரிக்கா முத்தரப்பு ராணுவக் கூட்டணியைக் கட்டிக்காப்பதன் நோக்கமே ஆசியாவில் அதன் திட்டத்தை நிறைவேற்றத்தான் என்று வட கொரியா கூறியது.

அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஐரோப்பாவிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் ஒரே நேரத்தில் அணுவாயுதப் போர் வெடிக்கக்கூடும் என்று
வடகொரியாவின் வெளியுறவு அமைச்சு கூறியது.

 

 

Malaimalar