யானைகளைக் கொல்லும் மர்மக் கிருமி – அச்சத்தில் சுவிட்ஸர்லந்துப் பூங்கா

சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் (Zurich) நகர வனவிலங்குப் பூங்காவில் யானைகளைக் கொல்லும் கிருமியின் பரவலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் நிபுணர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சுவிட்ஸர்லந்தின் ஆகப்பெரிய நகரான ஸுரிக்கில் 11,000 சதுரமீட்டர் பரப்பளவில் யானைகளுக்கான பூங்கா மைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இப்போது 5 யானைகள் மட்டுமே உள்ளன.

ஆசிய வகையைச் சேர்ந்த 3 யானைகள் கிருமித்தொற்றுக்குப் பலியாயின. ஜூன் மாத இறுதியில் முதல் யானைக்கும் பின் அடுத்தடுத்து மற்ற இரு யானைகளுக்கும் கிருமி பரவியது.

கிருமி தொற்றியதும் யானையின் உடலுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுப் பின்னர் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கும்.  கிருமி எப்போது, எப்படி, எங்குப் பரவுகிறது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

60 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ஆசிய யானைகள் உலகில் அருகி வரும் உயிரினங்களில் ஒன்று.உலகளவில் அத்தகைய 50,000 யானைகள் மட்டுமே உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

 

-smc