உலக மக்கள்தொகை மீண்டும் வளர்ச்சிகாணும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

உலக மக்கள்தொகை மீண்டும் வளர்ச்சிகாணும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் முன்னுரைத்திருக்கிறது.

2050ஆம் ஆண்டுக்குள் இன்னும் 2.2 பில்லியன் பேர்வரை மக்கள்தொகை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

COVID-19 நோய்ப்பரவல் உள்பட உலகம் சந்தித்த பல்வேறு சவால்களால் மக்கள்தொகை குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அந்தத் தடைகள் தற்காலிகமானவை என்று அமைப்பு தெரிவித்தது.

நோய்ப்பரவல் தணிந்து உலகம் புதிய வழக்கநிலைக்குத் திரும்புவதால் மக்கள்தொகை மேம்படும் என்று நம்பப்படுகிறது.

 

 

-smc