தற்பொழுது இஸ்மாயில் சப்ரிக் பிரதமராக இருக்கும் சூழலில் துணைப் பிரதமராக தன்னை நியமனம் செய்யவேண்டும் என்ற வகையில் அஸ்மின் அலி நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
இன்னமும் காலியாக இருக்கும் துணைப்பிரதமர் பதவிக்கு எப்படியாவது அஸ்மின்-னை துணைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். முஹிடின் யாசினும் ஹம்ச சைனுடினும். அப்படி நியனம் செய்யாவிட்டால் கட்சியின் ஆதரவை மீட்டுக்கொள்வதாவும் மிரட்டும் வகையில் கோடிகாட்டி உள்ளனர்.
இதற்கு தகுந்த பதிலாக பிரதமர் கட்சியி கூட்டணியில் இருந்து பெர்சத்த்து விலகினால் ஆட்சியை கலைத்து விடுவேன் என்று பயமுறுத்தி உள்ளார்.அஸ்மின் அலியின் இந்த மிரட்டலால் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தால் அது பெர்சத்து கட்சிக்கு ப்யனாக அமையாது.
அதேவேளை அப்படிப்பட்ட சூழலில் அம்னோ தனது முழுமையான அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்புள்ளது. நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் நஜிப் மற்றும் ஜஹிட் ஹமிடி போன்றவர்கள் அரசியலில் தேர்தலில் குதித்து மீண்டும் முழுமையாக அம்னோவின் ஆதிக்கத்திற்கு தயாராகி விடுவார்கள்.
அரசியல் கணிப்பாளர்கள், இஸ்மையில் சப்ரி ஊழல் வாதிகளை தண்டனைக்கு உட்படுத்தி விட்டுதான் மீண்டும் அம்னோவின் அதிகாரத்தை ப்யன்படுத்த முனைவார், அதிதான் அவருக்கு நிலைத்தன்மைய கொடுக்கும் என்கிறார்கள்.