அது ஜாலுர் கெமிலாங் இல்லை; அப்புறம் ஏன் இவ்வளவு ஆரவாரம்?

“டிரிப்போலி சாலைகளிலிருந்து புத்ரா உலக வாணிக மைய வளாகம் வரையில் மாற்றத்துக்கான போராட்டத்தை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது. அதன் கூக்குரலையும் செவிமடுக்க முடியாமல் இருக்க முடியாது.”

“நஜிப் கொடி’ விஷயம் மீது மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை

பெண்டர்:  ஊழல் ஆட்சியால் மலேசியர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரங்களுடன் ஒப்பிடுகையில் ஆட்சேபம் தெரிவிப்பதற்காக சில நிமிடங்களுக்கு மாணவர்கள் கொடியை மாணவர்கள் இறக்கியதில் என்ன பெரிய தவறு நிகழ்ந்து விட்டது?

உங்கள் நிலையில் உறுதியாக இருங்கள். மன்னிப்புக் கேட்காதீர்கள். உங்கள் குரல்கள் அவர்களுக்குக் கேட்க வேண்டும்.

மாணவர்கள் இறக்கியது ஜாலுர் கெமிலாங் அல்ல. அப்புறம் ஏன் இவ்வளவு ஆரவாரம்? இத்தகைய போக்குத்தான் நாட்டை தலைகீழாக மாற்றி விட்டது.

சில தனிநபர்களைக் கூட காயப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என நாம் எண்ணுகிறோம். ஆனால் அந்த அடையாள நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பதை ஆராய நாம் முனைவதில்லை.

மலேசியர்கள் முதிர்ச்சி அடைய வேண்டும்.

மைக்கல்: மாணவர்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அந்தக் கொடி இறக்கப்பட்டது, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் உருவப்படத்தை பினாங்கு அம்னோ மிதித்து எரியூட்டியதைக் காட்டிலும் 100 மடங்கு மேலானது. நேர்மாறாக நடந்து கொள்ளும் பிரதமர் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பை அவர்கள் ஜனநாயக ரீதியில் அதுவும் அமைதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மலேசியா ஆஸ்திரேலியா: மாணவர்கள் செய்தது நல்ல காரியம். பெர்க்காசா சுவரொட்டிகளை எரிப்பது சரி என்றால் மாணவர்கள் ஏன் பிரதமரது கொடியை இறக்கக் கூடாது?

சுஸாகேஸ்:  அம்னோ சூழ்நிலையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது. டிரிப்போலி சாலைகளிலிருந்து புத்ரா உலக வாணிக மைய வளாகம் வரையில் மாற்றத்துக்கான போராட்டத்தை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது. அதன் கூக்குரலையும் செவிமடுக்க முடியாமல் இருக்க முடியாது. தொடர்ந்து புறக்கணித்தால் அது உங்களுக்குத்தான் கேடு.

சுதந்தர மலேசியா: மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்பது அவர்களுடைய பண்புகளைக் காட்டுகிறது. தாங்கள் நம்பும் விஷயத்தில் அவர்கள் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றனர்.

நஜிப் கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடாக நடந்து கொண்டு வருகிறார். வெவ்வேறு கூட்டங்களில்  வெவ்வேறு மாதிரி பேசுகிறார். அந்த இரண்டு முகம் கொண்ட அரசியல்வாதி தம்மை “அமைதியானவர்” போலக் காட்டிக் கொள்ள முயலுகிறார். ஆனால் என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பேராசை பிடித்த அரசியல்வாதி அவர் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

கமலப்பன்ஸ்: மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் உயர்ந்த தார்மீகப் பண்புகளைக் காட்டியுள்ளனர். அவர்கள் நஜிப்பின் படத்தை மிதிக்கவில்லை. காறி உமிழவும் இல்லை. எரிக்கவும் இல்லை. மாட்டுத் தலையுடன் ஊர்வலம் போன அம்னோ கோமாளிகளுடன் ஒப்பிடுகையில் அந்த மாணவர்கள் எவ்வளவோ முதிர்ச்சி அடைந்தவர்கள்.

சபாக்காரன்: நஜிப் கொடியை இறக்கிய மாணவர் நடவடிக்கையையும் அதற்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்னும் அவர்கள் முடிவையும் நான் ஆதரிக்கிறேன். அவ்வாறு செய்ததின் மூலம் நீங்கள் நாட்டுக்கு நம்பிக்கையை அளித்துள்ளீர்கள். நீங்கள்தான் மலேசியாவின் எதிர்காலம்.

சிப்முங்க்: நான் மாணவர்களை ஆதரிக்கிறேன். மற்றவர்கள் செய்யத் துணியாத ஒரு காரியத்தை நீங்கள் செய்துள்ளீர்கள். யார் எஜமானர் என்பதை நீங்கள் அம்னோவுக்கு உணர்த்தி விட்டீர்கள். அது மக்களே தவிர அம்னோ கோமாளிகள் அல்ல.

அம்னோ தலைவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்டு விட்டனர். அவர்கள் தங்களை மட்டுமே பணக்காரர்களாக்கிக் கொண்டனர். அவர்கள் பெருத்து விட்டனர். அதனால் அவர்கள் தங்கள் சொந்தக் கால்களைக் கூட குனிந்து பார்க்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி ஏழை மக்களைப் பார்க்க முடியும்?

வருங்காலத்தில் யார் மன்னர் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். அம்னோவின் பொற்காலம் முடிந்து விட்டது. உண்மைக்கும் நியாயத்துக்கும் போராடும் மாணவர்கள் நமக்குத் தேவை.

அடையாளம் இல்லாதவன்_3fc4: இது தொடக்கம் என்றே நான் கருதுகிறேன். விரைவில் அம்னோ வரலாறு ஆகி விடும்.

நஜிப்பும் அம்னோவும் செய்வதை படித்த விவேகமான மலாய்க்காரர்கள் நன்கு அறிந்துள்ளனர். மலாய்க்கார இளைஞர்கள் தாங்கள் ஆத்திரமடைந்துள்ளதை அம்னோ கோமாளிகளுக்குக் காட்ட வேண்டும்.

TAGS: