உக்ரேனுக்கு 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி வழங்க 26 நாடுகள் உறுதி தெரிவித்துள்ளன.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாட்டின் ராணுவ திறன்களை மேம்படுத்த அந்த நிதியுதவி பயன்படுத்தப்படும்.
கீவ்வுக்கு நீண்டகால ஆதரவு வழங்குவதைப் பற்றிக் கலந்துரையாட ஐரோப்பிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் கோபன்ஹேகனில் (Copenhagen) சந்தித்தனர்.
புதிய நிதியுதவியில் சுமார் பாதி ஆயுதங்களை வாங்குவதற்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும் செலவிடப்படும்.
எஞ்சிய தொகை, ராணுவ பயிற்சி உள்ளிட்ட அம்சங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
-smc