மெக்சிகோவில் 43 மாணவர்கள் மாயமாய்ப் போன சம்பவத்தின் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆக உயரதிகாரி அவர்.
மாணவர்கள் காணாமற்போனது, அவர்கள் துன்புறுத்தப்பட்டது, நீதியை நிலைநாட்ட விடாமல் தடுத்தது ஆகிய சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாய்த் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் சொன்னது.
2014ஆம் ஆண்டு 43 மாணவர்கள் காணாமற்போனது மெக்சிகோவில் நடந்த ஆகக் கொடுமையான சம்பவங்களில் ஒன்று.
அது குறித்து 2015ஆம் ஆண்டு அரசாங்கச் சார்பில் அப்போதைய தலைமைச் சட்ட அதிகாரி ஜீசஸ் முரில்லோ கராம் (Jesus Murillo Karam) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த மாணவர்கள் மெக்சிகோ சிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போயினர்.
அவர்கள் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கொன்று குப்பையில் வீசப்பட்டதாகவும் அறிக்கை சொன்னது.
இருப்பினும் அதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. ஜீஸஸ் மரில்லோவின் கைது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-smc