பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப… மீண்டும் பிரம்படியை அறிமுகம் செய்யும் அமெரிக்கப் பள்ளி

அமெரிக்காவின் மிஸோரி (Missouri) மாநிலத்தில் ஒரு பள்ளி மீண்டும் பிரம்படியை அறிமுகம் செய்துள்ளது.

அந்தத் தண்டனையைப் பள்ளி 2001ஆம் ஆண்டு கைவிட்டது.

மாணவர்களின் பெற்றோருக்கும் அது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் ஏன் மீண்டும் பிரம்படி?

அதற்குக் காரணம் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் தான்.சென்ற ஆண்டு பள்ளி நடத்திய ஆய்வில் பெற்றோர் கூடுதல் ஒழுங்கு நடவடிக்கைகள் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இன்னும் சிலர் மாணவர்கள் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதற்குப் பதில் வேறொரு தண்டனை வேண்டும் என்று தெரிவித்திருந்ததாக The Guardian கூறியது.

அதனால் பிரம்படி மீண்டும் கொண்டுவரப்பட்டதாகப் பள்ளி தெரிவித்தது.தங்கள் பிள்ளைகளைப் பிரம்படிக்கு உட்படுத்தப் பெற்றோர்கள் அனுமதி வழங்கலாம்.

பள்ளியின் தலைமை ஆசிரியரால் மட்டுமே பிரம்படி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

 

 

-smc