19 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருள்கள் – இத்தாலியிடம் திருப்பிக் கொடுத்த நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அரசுதரப்பு வழக்கறிஞர்கள் சுமார் 19 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருள்களை இத்தாலியிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

அவ்வாறு 58 கலைப்பொருள்கள் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் சில Metropolitan Museum of Art அருங்காட்சியகத்தில் இருந்தன.

திருடப்பட்ட கலைப்பொருள்கள் மைக்கேல் ஸ்டெய்ன்ஹார்ட் (Michael Steinhardt) என்ற ஆடவரிடம் விற்கப்பட்டன. அவர் பழைமையான கலைப்பொருள்களைச் சேகரிக்கும் உலகின் முன்னணி சேகரிப்பாளர்களில் ஒருவர்.

அவர் மீது கலைப்பொருள்களைப் பெறுவதற்கு எதிராக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் நியூயார்க் அரசுதரப்பு வழக்கறிஞர்களின் அலுவலகம் சுமார் 66 மில்லியன் டாலர் மதிப்பிலான கிட்டத்தட்ட 300 கலைப்பொருள்களை 12 நாடுகளிடம் திருப்பிக் கொடுத்துள்ளது.

 

 

-mm