நஜிப், ரோஸ்மாவின் பட்டங்களை சிலாங்கூர் சுல்தான்அகற்றினார்

சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோருக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதைகளை  திரும்ப எடுத்த்துக்கொண்டார்.

நீதிமன்றத்தில் இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த ரத்து இன்று அமலுக்கு வந்தது.

சிலாங்கூர் மாநிலச் செயலர் ஹாரிஸ் காசிமின் அறிக்கையில், மாநில அரசியல் சாசனம் மற்றும் பட்டங்கள்மீதான சட்டத்தின் கீழ் சுல்தானின் தனிச்சிறப்புக்கு இணங்க, இந்த கவுரவ பட்டங்கள் நீக்கப்பட்டன.

சுல்தான், நஜிப் மற்றும் ரோஸ்மா ஆகியோரின் பட்டங்களை 2019 இல்  இடைநிறுத்தினார், அப்போது  நீதிமன்ற வழக்கின் முடிவு நிலுவையில் இருந்தது.

அப்போது நஜிப் மீது உயர் நீதிமன்றத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல் மற்றும் SRC இன்டர்நேஷனல் Sdn Bhd நிதியில் பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நஜிப்புக்கு 2004 ஆம் ஆண்டில் டத்தோஶ்ரீ என்ற பட்டத்தைக் கொண்ட  Keahlian Darjah Kebesaran Seri Paduka Mahkota Selangor (SPMS) Kelas Pertama வழங்கப்பட்டது.

இதற்கிடையில், ரோஸ்மாவுக்கு 2005 ஆம் ஆண்டில் SPMS Kelas Pertama விருது வழங்கப்பட்டது, இது Datin Paduka Seri என்ற பட்டத்தைக் கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலானில் இவர்களின் பட்டங்கள் பறிக்கப்பட்டன.

இருப்பினும், இவர்கள் இன்னும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான டத்தோஸ்ரீ பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

நஜிப் பகாங், பேராக், மலாக்கா, கெடா, பினாங்கு, பெர்லிஸ், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலிருந்து எட்டு பெற்றுள்ளார், ரோஸ்மாவுக்கு பகாங், மலாக்கா, கெடா, சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களிலிருந்து டத்தோஸ்ரீ பட்டம் மற்றும் அதற்கு இணையான பட்டங்கள் உள்ளன.