புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது புதிய கனவு: அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புற்றுநோயால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.

உயிர்த்தொழில்நுட்ப உற்பத்தி, ஆய்வு ஆகியவற்றுக்கு மேலும் ஆதரவு நல்குவது புதிய திட்டம். முன்னைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி (John F Kennedy) ஆற்றிய நிலவு உரையின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி அதிபர் பைடன் பேசினார்.நிலவுக்குச் செல்வதைக் கனவாகக் கொண்ட உரை அது.

அதை ஒட்டிப் பேசிய அதிபர் பைடன், புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது புதிய கனவு என்றார்.அடுத்த இருபத்தைந்து ஆண்டில் புற்றுநோய்த் தொடர்பான மரணங்களைப் பாதியாகக் குறைப்பது நோக்கம் என்றார் அவர்.

மருந்து தயாரிப்பு தொடர்பான உயிர்த் தொழில்நுட்பத்தை உயர்த்தவும் பைடன் நிர்வாகம் திட்டமிடுகிறது.

உலகிலேயே வலுவான உயிர்த்தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்த போதிலும் அமெரிக்காவின் சில உயர்த்தொழில்நுட்பங்களின் உற்பத்தி  வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டது.

சீனாவை நம்பி இருக்க வேண்டிய நிலைமை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

-smc