ரஷ்ய ராணுவத்தில் 300,000 பேரைச் சேர்க்க முயற்சி – தற்காப்பு அமைச்சர்

மாஸ்கோ, கூடுதலாக 300,000 பேருக்கு உக்ரேனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடு அழைப்பு விடுக்கும் என்று ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷொய்கு (Sergei Shoigu) தெரிவித்துள்ளார்.

மாணவர்களும் கட்டாய ராணுவச் சேவையாளர்களும் அழைக்கப்படமாட்டார்கள் என்று அவர் கூறினார்.

ரஷ்யாவின் மில்லியன் கணக்கான போர்க்காலப் படை வீரர்களும் அதிலிருந்து விலக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை ரஷ்யாவின் ராணுவ வீரர்களில் 5,937 பேர் உக்ரேனில் மாண்டதாக அவர் சொன்னார்.

ரஷ்யா, உக்ரேனுடன் மட்டும் சண்டைபோடவில்லை, உக்ரேனில் உள்ள மேற்கத்திய நாடுகளின் கூட்டணியுடனும் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

 

-smc