ரஷிய பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஆறு குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

ரஷியாவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.

ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கருப்பு கலர் டீ ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதும் தெரிய வந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

-mm