சீனாவில் Tesla வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
அமெரிக்க நிறுவனமான Tesla சீனாவில் சென்ற மாதம் 83,000க்கும் அதிகமான வாகனங்களை விற்றதாகத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் அங்கு விற்பனையான Tesla வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, அதன் வாகன விற்பனை சுமார் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதனால் முன்னர் 17,000 வாகனங்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த நிறுவனம் தற்போது 22,000 வாகனகங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
-smc