இன்று முதல் 70 நாடுகளைச் சேர்ந்தோர் ஜப்பானுக்கு விசா இல்லாமல் செல்லலாம்

COVID-19 காரணமாக உலகிலேயே ஆகக் கடுமையான  கெடுபிடிகளை விதித்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் கட்டுப்பாடுகளைக் கைவிட்டிருக்கிறது.

இனி சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜப்பானுக்கு விசா இல்லாமல் செல்லலாம். மூன்று முறை தடுப்பூசி போட்டவர்கள் நாட்டுக்குள் சென்றதும் COVID-19 சோதனை செய்யத் தேவையில்லை.

எனினும் முழுமையாகத்  தடுப்பூசி போடாதவர்கள் புறப்படுவதற்குமுன் மூன்று நாள்கள் கோவிட் இல்லை என்ற ஆதாரத்தைக் காட்டவேண்டும்.ஜப்பானிய நாணயத்தின் மதிப்பு 24 ஆண்டில் இல்லாத அளவுக்கு இறங்கிவிட்டது.

பொருளியலுக்குப் பயணத்துறை கைகொடுக்கும். பயணத்துறை ஆண்டுக்கு 35 பில்லியன் டாலரைக் கொண்டு வரும் என்று ஜப்பான் எதிர்பார்க்கிறது.

 

 

 

-smc