2025இல் 500,000 பேரைக் குடியேறிகளாக ஏற்றுக்கொள்ளத் திட்டமிடும் கனடா

கனடா அதிகமான வெளிநாட்டினரை வரவேற்கத் தயாராகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஊழியர் பற்றாக்குறை அதற்கு முக்கியக் காரணம். அதனால் குடியேறிகளின் எண்ணிக்கையை உயர்த்த அது திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலையிலிருந்து விரைவாக ஓய்வு பெறுகின்றனர். அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைத் தகவல்களின்படி கனடாவில் ஏழு பேரில் ஒருவர், 55 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

நாட்டில் நிறுவனங்கள் மிகப்பெரிய ஊழியர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. மார்ச் மாதம் ஒரு மில்லியன் வேலைக் காலியிடங்கள் இருந்தன.

 

 

-smc