உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு வட கொரியா கணிசமான அளவு பீரங்கிக் குண்டுகளை ரகசியமாகக் கொடுத்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னர், அந்தக் குற்றச்சாட்டுக்கு வட கொரியா மறுப்புத் தெரிவித்திருந்தது.
உக்ரேன் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று சாடிய வட கொரியா, ரஷ்யப் படையெடுப்பை நியாயப்படுத்தியிருந்தது. வட கொரியாவும், சீனாவும் ரஷ்யாவுக்கு உதவிக் கொண்டிருப்பது பற்றி அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் எட்டு மாதங்களாக நீடிக்கும் போரில், வட கொரியாவின் ஆதரவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று நம்புவதாக அமெரிக்கா சொன்னது.
-smc