இந்தியாவில் லோக்பால் அமைப்பிற்குள் சி.பி.ஐ., வரும் பட்சத்தில் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிறைக்குப் போக வேண்டியது வரும் என ஊழலுக்கு எதிராக போராடிவரும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட லோக்பால் தீர்மானத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றுதவற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இதன் மீதான விவாதம் வரும் 27-ம், 28-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் இருக்கும். இதனால் காரசார விவாதம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வலுவான லோக்பால் தீர்மானம் கொண்டு வருவதில் ஆளும் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது என்றும் பலமில்லாத லோக்பாலை கொண்டு வரவும் அதன் மூலம் ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளை காப்பாற்ற வழிசெய்கிறது என்றும் அன்னா ஹசாரே குற்றம் சுமத்தியுள்ளார்.