ஆஸ்திரேலியாவில் அணைந்துள்ள சொகுசுக் கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு COVID-19

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகளைக் கொண்ட சொகுசுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அணைந்துள்ளது.

அந்நாட்டு அரசாங்கம் சொகுசுக் கப்பல் பற்றி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. Majestic Princess எனும் அந்தக் கப்பலில் உள்ள பயணிகளில் சுமார் 800 பேருக்குக் COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது பயணிகளில் ஐவரில் ஒருவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆஸ்திரேலியா முழுவதும் கிருமிப்பரவல் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

 

 

-smc