பாலித் தீவில் இடம்பெறும் G20 உச்சநிலை மாநாடு. இன்று தொடக்கம்..

இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெறும் G20 உச்சநிலை மாநாடு இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. அனைத்துலக சுகாதார நடைமுறைகள், பொருளியல் மீட்சி, கோவிட்-19 நோய்ப்பரவல் ஆகிய தலைப்புகள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

G20 அல்லது Group of Twenty என்று அழைக்கப்படும் குழு, உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியது. அது, உலகப் பொருளியலில் 85 விழுக்காட்டுக்கும் அனைத்துலக வர்த்தகத்தில் 75 விழுக்காட்டுக்கும் பொறுப்பு வகிக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese), சீன அதிபர் சி சின்பிங்கைச் (Xi Jinping) சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடாவும் (Fumio Kishida)  திரு. சீயைச் சந்திக்கவிருக்கிறார்.

அவர்கள் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பைப் பற்றி கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) G20 மாநாட்டில் இணையம்வழி கலந்துகொள்ளவிருக்கிறார்.

 

 

 

-smc