22வது உலக கோப்பை கால்பந்து; அனைவரையும் மலைக்க வைத்துள்ள பரிசுத்தொகை!

உலக கோப்பை கால்பந்தின் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு மிகப் பெரும் பரிசுத் தொகையாக 342 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இறுதியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018 ஆம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் 20ம் திகதி கத்தாரில் ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டி டிசெம்பர் 18ம் திகதி வரை 29 நாட்கள் இடம்பெறவுள்ளது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் இப் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் போட்டியில் வேலும் அணிக்கு மொத்த பரிசு தொகை 3586 கோடியாகும். இது கடந்த முறையை விட 328 கோடி கூடுதலாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 342 கோடியும், 2 ஆவது இடத்துக்கு 244 கோடியும், 3 ஆவது இடத்துக்கு 219 கோடியும், 4 ஆவது இடத்துக்கு 203 கோடியும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா 138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா 73 கோடியும் பரிசாக வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

-ift