அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 82 வயது திருமதி பெலோசி கிட்டத்தட்ட 20 ஆண்டாக மக்களவையில் ஜனநாயகக் கட்சிக்குத் தலைமையேற்றுள்ளார்.
அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
எனினும் அவர் கலிபோர்னியா தொகுதியைப் பிரதிநிதித்து மக்களவையில் தொடர்ந்து செயல்படுவார். குடியரசுக் கட்சி மக்களவையைக் கைப்பற்றியுள்ளது.
திரு. கெவின் மக்கார்த்தி (Kevin McCarthy) அமெரிக்காவின் புதிய மக்களவை நாயகராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை திருமதி பெலோசி மக்களவை நாயகராகப் பணியாற்றுவார்.
அவர் 1987ஆம் ஆண்டில் முதன்முதலில் மக்களவை உறுப்பினராக ஏற்ற பொறுப்பில் 2025ஆம் ஆண்டு ஜனவரிவரை தொடர்ந்து இருப்பார்.
-smc