வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அணுவாயுதத்தின் மூலம் பதிலடி கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் வடகொரியாவை அணுவாயுத வல்லமை பெற்ற நாடு என அறிவித்த அவர், அந்த நிலை மாறாது என்று கூறியிருந்தார். அப்போதிருந்து ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் முயற்சிகளை அமெரிக்கா ஆராய்கிறது.
கூட்டு ராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட வட்டாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வாஷிங்டன் அதிகரித்திருக்கிறது. வடகொரியத் தலைவர் கிம், அத்தகைய பயிற்சிகளைப் போர்ப் பயிற்சிகள் என்று கருதுகிறார்.
அச்சுறுத்தும் அத்தகைய நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால், பியோங்யாங் அணுவாயுதத்தின் மூலம் கடும் பதிலடி கொடுக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்ததாக KCNA தெரிவித்தது.
-smc