‘அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்காக…’ – வட கொரியாவுடன் பணியாற்ற விரும்பும் சீன அதிபர்

அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்காக வட கொரியாவுடன் பணியாற்ற விரும்புவதாகச் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping)  கூறியிருக்கிறார்.

சீன அதிபர், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு (Kim Jong Un) எழுதிய கடிதத்தில் அந்த விவரம் இடம்பெற்றதாக KCNA செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் திரு. சியும் இந்தோனேசியாவின் பாலித்தீவில் நடைபெற்ற G20 உச்சநிலை மாநாட்டில் சந்தித்து 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அப்போது திரு. பைடன், வட கொரியா வட்டார நிலைத்தன்மைக்கு முன்வைக்கும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரத் திரு. சியிடம் உதவி கோரினார்.

வடகொரியாவின் தூண்டுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பதற்றம் அதிகரித்தால், அமெரிக்கா அந்த வட்டாரத்தில் அதன் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிவரலாம் என்று திரு. பைடன் எச்சரித்தார்.

வடகொரியா இவ்வாண்டில் எண்ணிலடங்கா ஏவுகணைகளைப் பாய்ச்சியிருக்கிறது. ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தின் கீழ், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சோதிக்க ஏற்கெனவே அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-smc