பாகிஸ்தானில் காவல்துறையைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக நம்பப்படும் தற்கொலைத் தாக்குதல் – தலிபான் பொறுப்பேற்றுள்ளது

மேற்குப் பாகிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலில்  3 பேர் மாண்டனர், 28 பேர் காயமுற்றனர்.

அந்தத் தாக்குதலுக்குத் தலிபான் எனும் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. குவெட்டா (Quetta) நகரில் சுற்றுக்காவலை மேற்கொண்ட  காவல் துறையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 பேர் காவல்துறை அதிகாரிகள். இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி நிலையத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்தபோது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

 

-smc