அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடும் புயல், 14 பேர் மரணம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வீசிய கடும் புயலில் குறைந்தது 14 பேர் மாண்டுவிட்டனர். அங்கு பலத்த காற்று வீசுவதாகவும், கனத்த மழை பெய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கானோருக்குக் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சுமார் 190,000 வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலிஃபோர்னியா மாநிலத்தில் அவசரநிலையை அறிவித்திருக்கிறார்.

அதன் வழி, மத்திய அரசாங்கத்திடமிருந்து உதவி பெற முடியும். இன்று கலிஃபோர்னியா மாநிலத்தின் சில பகுதிகளில் 18 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலைச் சேவை தெரிவித்துள்ளது.

அதனால் மேலும் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

 

 

-smc