ஆப்கானிஸ்தானில் 97% மக்கள் வறுமையில் உள்ளனர் – ஐ நா

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்கும் மேல், பெண்களின் பொது சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வண்ணம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

ஆடைக்கட்டுப்பாடு, ஆண்களின்றி வெளியே செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை, உயர்கல்விக்கு தடை என தொடர்ந்து பெண்கள் மீதான அடக்கு முறையை தலிபான்கள் தொடுத்து வருகின்றனர்.

இப்படியாக கடந்த வாரம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தடை தலிபான்கள் தடை விதித்தனர். இதற்க்கு ஐநா அமைப்பு முதல் உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள 97% மக்கள் வறுமையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், அந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அடிப்படை உதவிகள் தற்போது அவசியமாக தேவைப்படுவதாகவும், 2 கோடி மக்கள் பசியால் வாடுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

 

 

-ift