புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமரை உக்ரைன் அதிபர் வோல்மியுர் ஜெலென்ஸ்கி வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கிய பகுதிகளையும் போரினால் சேதமடைந்த பகுதிகளையும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதற்கும் நல்ல நேரம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோல்வியடைந்தால், அது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நல்ல நேரமாக அமையும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த பயணத்தின் போது கூறியது உலகம் முழுவதும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க பிரித்தானியா எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாக பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

-ibc