2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார்.

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைனும் அமெரிக்கா உள்ள பல நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசினார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் ஜெலன்ஸ்கி டெலிகிரமில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.

அதில், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது என்பதை பிரான்ஸ் அதிபரிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

-dt