ஈரானில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம் – நூற்றுக்கணக்கானோர் காயம், இருவர் மரணம்

ஈரானின் வடமேற்கு மாநிலமான அஸர்பைஜானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் இருவர் மாண்டதாக மாநில ஊடகம் தெரிவித்துள்ளது.

அஸர்பைஜானிலுள்ள கோய் நகரம் துருக்கியேயின் எல்லைப்பகுதியில் இருக்கிறது. அதனை உலுக்கிய நிலநடுக்கத்தால் 580 பேர் காயமுற்றனர்.

பூமியின் அடியில் உள்ள tectonic plates எனப்படும் புவிக் கவசத்தகடுகளின் நடவடிக்கை அதிகமுள்ள இடத்தில் கோய் நகரம் இருக்கிறது. அதன் காரணமாக அங்கு நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளது.

 

 

-sm