பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : ரஷ்யாவின் பங்கேற்பு குறித்து உச்சிமாநாட்டை நடத்தும் பிரிட்டன்

அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து 30இற்கும் மேற்பட்ட நாட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாக தயாராகி வருகிறது.

இது சம்பந்தமான உச்சிமாநாடு, வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை உக்ரேனிய ஒலிம்பிக் அதிகாரிகள், நேற்றைய தினம் ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்தும், ரஷ்ய விளையாட்டு வீரர்களின் முழுமையான தடை குறித்தும் ஆலோசனை செய்தனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லிதுவேனியாவின் விளையாட்டு துறை அமைச்சர், ரஷ்யா மற்றும், பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்கில் இருந்து விலக்குவது குறித்த பிரித்தானிய பிரதிநிதி 30 இற்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய மெய்நிகர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் உக்ரைன் மீதான படையெடுப்பை தீவிரமாக ஆதரிக்கவில்லை எனில் பாரிஸ் ஒலிம்பிக்கில் நடுநிலையாளர்களாக பங்கேற்கலாம் என ஐ.ஓ.சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

-if