உக்ரேனில் போர் மோசமடைகிறது -உக்ரேனிய அதிபர்

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் போர் நிலவரம் மோசமடைந்து கொண்டிருப்பதாக அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருக்கிறார்.

ரஷ்யா மென்மேலும் படையினரை அந்தப் பகுதிக்கு அனுப்பிவருவதை அவர் சுட்டினார். Donbas வட்டாரத்தில் ரஷ்யப் படையினர் மெல்ல மெல்ல முன்னேறிச் செல்கின்றனர். Donetsk இன் வடக்கே Bakhmut நகரை அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

உக்ரேனியப் படையினருக்குத் தளவாடங்கள் அனுப்பப்படும் முக்கியமான சாலையை வசப்படுத்தவும் ரஷ்யப் படையினர் மும்முரமாய் முயல்கின்றனர். Donetsk இன் தென்மேற்கே Vuh-le-dar நகரைக் கைப்பற்றவும் அவர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர்.

முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக்குடன் திரு. ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேசினார். உக்ரேனின் ராணுவ ஆற்றலை வலுப்படுத்தக் கூடுதல் உதவிகளை வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதைச் செய்வதற்கு திரு. சுனாக் உறுதியளித்தார்.

ரஷ்யப் படையினரைப் பின்வாங்கச் செய்ய அனைத்துலகச் சமூகம் தேவையான உதவிகளை விரைவாகச் செய்யவேண்டியது முக்கியம் என்பதைத் தலைவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பிரிட்டனின் தற்காப்புச் சாதனங்கள் இயன்றவரை சீக்கிரமாக உக்ரேனுக்குக் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் சொன்னது.

 

 

-sm