அமெரிக்காவின் செயலால் உக்ரேன் தீப்பற்றி எரியும் – ரஷ்யா பரபரப்பு எச்சரிக்கை

அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கினால் ரஷ்யத் தரப்பிலிருந்து அதிக பதிலடி கிடைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்.

கீவ் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள உக்ரேன் பகுதிகள் தீப்பற்றி எரியும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யா அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயாராய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உக்ரேனுக்குப் புதிய ஏவுகணை ஒன்றை வழங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரேன் தாக்கக்கூடிய தூரத்தை அது இரட்டிப்பாக்கக்கூடியது.

 

 

-if