உக்ரேனில் தொடரும் போர், அமைதி நிலவுவதற்கான சாத்தியம் குறைவு

உக்ரேனில் தொடரும் போர் இன்னும் மோசமாகக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் எச்சரித்துள்ளார்.

அங்கு அமைதியை நிலைநாட்டும் சாத்தியம் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திட்டங்களைத் திரு. குட்டெரஸ் பகிர்ந்துகொண்டார்.

நிறுவனத்தின் பொதுச் சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இதற்கிடையே ரஷ்யா இம்மாத இறுதியில் பெரிய அளவில் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்று உக்ரேன் எதிர்பார்க்கிறது.

ரஷ்ய-உக்ரேனியப் போர் தொடங்கி ஓராண்டாகவிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு வழங்குவதாக உறுதிகூறியிருந்த ராணுவ ஆயுதங்கள் முழுமையாகச் சென்றுசேர்வதற்குள், அந்தப் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

உக்ரேனிய அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரம்பியிருப்பதால் அதைச் சரிசெய்த பின்னரே பில்லியன் கணக்கான டாலர் நிவாரண உதவி சென்றுசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

-sm