உலக மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் தினசரி Facebook சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் தினசரி Facebook தளத்தைப் பயன்படுத்தியோரின் சராசரி எண்ணிக்கை 2 பில்லியனுக்கு உயர்ந்தது.
செலவு அதிகரித்து, விளம்பர வருமானம் குறைந்ததால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில் Facebook உள்ளது.
பயனீட்டாளர் எண்ணிக்கை எதிர்பாராத அளவு உயர்ந்திருப்பது அந்த நிறுவனத்துக்குப் புதிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. Facebook நிறுவனர் Mark Zuckerberg 2023 செயல் திறன் ஆண்டு என்று அறிவித்த சில
மணிநேரத்தில் முதன்மை நிறுவனமான Metaவின் பங்கு வர்த்தகம் 15 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. செலவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப் போவதாக Mark Zuckerberg தெரிவித்துள்ளனர்.
-if