2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பிற்கு போட்டியாக களமிறங்கும் நிக்கி ஹாலே

2024 அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, 51, இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்கவுள்ளது.

இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்தநிலையில் அதே கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலே வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நானும் களமிறங்குவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிரம்ப்பிற்கு போட்டியாக களம் இறங்க போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

-dt