சீனாவில் 200 மில்லியன் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த நவெம்பர் மாதத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமையவே 200 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 8 இலட்சம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டதாகவும், தீவிர சிகிச்சையின் பின்னர் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் அந்நாட்டு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியமையை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.