உக்ரைன் போரில் பலூன்களைக் களமிறக்கியுள்ள ரஷ்யா

உக்ரைன் போரில் ரஷ்யா தனது படையெடுப்புக்கு வலுச்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ரஷ்யா பலூன்களைக் களமிறக்குவதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.

தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு பொருள்களை தனது ஆகாயப்படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது. நிலத்திலிருந்து ஆகாயத்துக்குத் தாக்குதல் முறையை மாற்றி தனது ஆயுத பலத்தைக் குறைக்க மாஸ்கோ முயல்வதாகக் கீவ் சந்தேகிக்கிறது.

பக்கத்து நாடுகளான ருமேனியாவும் மொல்டோவாவும் ஆகாயத்தில் பறக்கும் பொருள்கள் காணப்பட்டதை உறுதிசெய்துள்ளன. மொல்டோவா தனது ஆகாயவெளியைத் தற்காலிமாக மூடி வைத்துள்ளது.

வானிலை ஆய்வு பலூன் போன்ற பொருளைக் குறிவைத்து ருமேனியா இரண்டு போர் விமானங்களை அனுப்பியது. ரஷ்யா தனது கவச வாகனங்களில் பாதியைப் போரில் இழந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில் பலூன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பழைய சோவியத் காலக் கவச வாகனங்களையே மாஸ்கோ நம்பியிருப்பதாக அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக்கழகம் கூறியிருக்கிறது.

 

 

-if