சீனாவில் கோவிட் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமளவிலான எதிர்ப்பாளர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும், 100க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே, நாட்டில் கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று சீன அரசாங்கம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-if