வான் அகமட், யார் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?

“நியாயமான நடுவராக இல்லாததற்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களை முற்றாக உடைத்த ஜான் மெல்லட்டுக்கு நன்றி.”

 

 

 

 

இசி-யின்(தேர்தல் ஆணையம்) வாதங்களில் பல குறைபாடுகள்

கேஎஸ்என்: தேர்தல் ஆணைய வாதங்களில் மட்டும் குறைபாடுகள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் பணித்திறன், சுதந்திரம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அதுவே குளறுபடிதான்.

இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் ஆகியோர் பற்றி மட்டுமே பொது மக்களுக்குத் தெரிந்துள்ளது. ஆனால் அந்த ஆணையத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் யார்?

அவர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் பேசுவதும் இல்லை. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இயோ சீ வெங்: மெல்லட்டின் வாதங்கள் அம்னோ நியமனதாரர்களுக்குப் புரியாது.மலாய் மேலாண்மை உணர்வுடன் எஜமானருக்கு உதவும் தேசியவாதமே அவர்களுக்குத் தெரிந்த விஷயமாகும்.

ஆ ஹோ: மலேசிய பொது அமைப்புக்களில் புறையோடிப்போன மலாய்சி சிந்தனைக்கு வான் அகமட் ஒர் எடுத்துக்காட்டு. இசி-யின் மூத்த அதிகாரி என்ற முறையில் மலேசிய வாக்காளர்களுக்குத் தாம் ஆற்ற வேண்டிய கடமை என்ன என்பதே அவருக்குத் தெரியவில்லை.

இசி பாகுபாடு காட்டக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள அவர் மறுக்கிறார். தாம் பாகுபாடு காட்டுவதை மறுப்பதற்குக் கூட அவருக்கு போதுமான அறிவாற்றல் இல்லை. மலேசிய பொது அமைப்புக்களில் பணியாற்றுகின்ற பல அம்னோ நியமனதாரர்களின் சிந்தனையும் அதுதான்.

பென்-காஸி:  நியாயமான நடுவராக இல்லாததற்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களை முற்றாக உடைத்த ஜான் மெல்லட்டுக்கு நன்றி.

அந்தக் கட்டுரை அரசியலை அடிப்படையைக் கொண்டது என நீங்கள் நினைத்தால் நிச்சயம் அதுதான். ஏனெனில் அது மலேசிய அரசியல் அமைப்பு முறையை ஆராய்கிறது. இசி பிஎன் அரசாங்கம் நியமித்ததாகும். அதனால் இசி அதற்குத் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையில் இசி பிரதமர்துறையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்சி: பிஎன் வெற்றியை உறுதி செய்யும் தனது பணியை மேற்கொள்ளும்போது இசி தனது முட்டாள்தனத்தையும் திறமையின்மையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தினால் பிஎன் வாக்குகள் குறைந்து விடும். காரணம் பல முறை வாக்களிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்கள் அதனைச் செய்ய முடியாமல் போய் விடும்.

அர்ககெடோன்: நாட்டின் அளவைப் பொறுத்து பிரச்சாரக் காலம் இருக்க வேண்டும் என வான் அகமட் வாதாடுகிறார். உண்மையில் அந்த இசி தலைவருடைய மூளை அளவையே அது அடித்தளமாகக் கொண்டுள்ளது. மூளை எவ்வளவு சிறிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பிரச்சார காலமும் குறைவாக இருக்கும்.

இசி: நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் எல்லாப் பரிந்துரைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்

பேஸ்: மலாய் மரபுச் சொற்றொடரான ‘bodoh sombong’ என்பற்கு நல்ல எடுத்துக் காட்டு இசி துணைத் தலைவர் வான் அகமட். தேர்தல்களை நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வகுத்த சட்டங்களின் கீழ் இசி இயங்குகிறது என்பதையே அவர் மறந்து விட்டார்.

அத்துடன் அந்த சட்டங்கள் கல்வெட்டுக்கள் அல்ல. வாக்காளர் நன்மைக்காக அவற்றைத் திருத்தலாம் என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

அந்த யோசனைகளை ஆய்வு செய்யுங்கள். அவை தூய்மையான வெளிப்படையான நியாயமான தேர்தல்களுக்கு வழி வகுக்கும் என்றால் சட்டங்களை மாற்றுங்கள். அதனைப் புரிந்து கொள்வது கூட சிரமமா?

எங்களை மேலாதிக்கம் செய்வதற்கா வாக்காளர்களாகிய நாங்கள் உங்களுக்குச் சம்பளம்  கொடுக்கிறோம்?

கோஸோ: சுயேச்சையானது. வேடிக்கை வேண்டாம். நாங்கள் அன்றைய அரசாங்கத்தின் கீழ் வேலை செய்வதாகவும் அரசாங்கத்திடமிருந்து உத்தரவுகளை பெறுவதாகவும்  அண்மையில் நீங்கள் எங்களிடம் கூறினீர்கள். உங்கள் பிஎன் எஜமானரைப் போன்று அடிக்கடி நேர்மாறாக பேச வேண்டாம்.

குவினோபாண்ட்: நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். இசி நிர்வாக அமைப்பு என்றும் சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்திலிருந்து வர வேண்டும் என இசி துணைத் தலைவர் அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது நாடாளுமன்றம் அங்கீகரித்தாலும் அதனை அமலாக்கப் போவதில்லை என அவர் சொல்கிறாரா? உண்மையில் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும். எப்போது இசி சட்டமியற்றும் அமைப்பானது?

நேர்மை: நாடாளுமன்றத்தைக் காட்டிலும் தமக்கு அதிக அதிகாரம் இருப்பதைப் போல வான் அகமட் நடந்து கொள்கிறார். அதில் அகங்காரம் தொனிக்கிறது. அதே வேளையில் நாடாளுமன்றத்தையும் அவமானப்படுத்துகிறார். அதிகாரத்தில் உள்ள யாரோ ஒருவர் அவருக்கு பின்புலமாக இருக்கிறார்.

அர்ககெடோன்: வான் அகமட் சொல்கிறார்: “இசி கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட சுயேச்சை அமைப்பு. அது மற்ற அரசுத் துறைகளின் அதிகாரத்திலிருந்து விடுபட்டது.”

என்றாலும் இன்னொரு கட்டத்தில் தமக்கு அதிகாரம் ஏதும் இல்லை என இசி தலைவர் கூறுகிறார்.

TAGS: