11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படவிருக்கும் சவுதி அரேபிய, சிரியத் தூதரங்கள்

சவுதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன.

11 ஆண்டுகளாக இருநாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது. நோன்பு மாதத்துக்குப் பிறகு தூதரகங்களை மீண்டும் திறக்க அவை திட்டமிட்டுள்ளதாய் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இருநாடுகளின் துணைத் தூதரச் சேவைகளை மீண்டும் தொடங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதைச் சவுதி அரேபிய அரசாங்கத் தொலைகாட்சி உறுதிப்படுத்தியது.

சவுதி அரேபியாவும் ஈரானும் அவற்றின் உறவைச் சீர்ப்படுத்தும் முக்கிய உடன்பாட்டில் 2 வாரங்களுக்கு முன்னர் கையெழுத்திட்டன. பரந்த அரபு வட்டாரத்துக்குச் சிரியா மீண்டும் திரும்பத் தூதரகச் செயல்பாடுகள் வழியமைத்துத்தரும்.

உள்நாட்டுப் போருக்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸாத் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து 2011ஆம் ஆண்டு அரபு லீக், சிரியாவைத் தற்காலிகமாக விலக்கி வைத்தது.

 

 

-sm