“முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் கீர் தோயோ சொல்கிறார், ‘நான் ஒன்றும் கையூட்டு பெறவில்லையே.குறைந்த விலைக்கு நிலம் வாங்கினேன்,அவ்வளவுதான்’. என்ன வேடிக்கை, பார்த்தீர்களா.”
ஊழல் குற்றச்சாட்டுக் கையூட்டு பெற்றதற்காக அல்ல-கீர் விளக்கம்
வீரா: சிலாங்கூர் முன்னாள் எம்பி முகம்மட் கீர் தொயோ அவர்களே, குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ்தான் உங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏன் தெரியுமா? பெரியண்ணன் அம்னோ உங்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட விரும்பவில்லை.அதனால் நீங்கள் ஊழல் புரிந்தவர் அல்லர் என்று ஆகிவிடாது, அதுவும் பொதுமக்கள் கருத்தில்.
சீ ஹோ: குற்றவாளி என்று தீர்ப்புச் சொல்லியாகிவிட்டது. இருந்தும் வார்த்தைகளை வைத்து விளையாடுகிறார் கீர்.
கேரி:முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் கீர் தோயோ சொல்கிறார்: “நான் ஒன்றும் கையூட்டு பெறவில்லையே.குறைந்த விலைக்கு நிலம் வாங்கினேன்,அவ்வளவுதான்.” என்ன வேடிக்கை, பார்த்தீர்களா!
கேபி: எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ஊழல் ஊழல்தான்.
உண்மை விளம்பி: 12மாதச் சிறைதானே. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். நான் நீதிபதியாக இருந்தால் ஆயுள் தண்டனை விதித்திருப்பேன். பதவியில் இருந்தபோது மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் தப்பான வழிகளில் பயன்படுத்திக் கொண்டீர் என்பதை நினைத்துப் பாரும்.
நியாயவான்: என்னதான் வார்த்தை ஜாலம் காட்ட முனைந்தாலும் நீர் ஒரு திருடர். உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு திருட்டுத்தனம் செய்ததால் தண்டனையும் கூடுதலாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
லுவாங்: கீர், சொல்வது உண்மைதான்.அது கையூட்டு அல்ல. பகல் கொள்ளை.