செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் – தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேசும் அமெரிக்கத் தலைவர்கள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்துப் பேச பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.

கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து எத்தகைய பாதுகாப்புக் கவசம் இருக்கிறது என்று அவர்கள் வினவினர்.

திருவாட்டி கமலா ஹாரிஸ் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு நிறுவனங்களுக்கு இருப்பதாக வலியுறுத்தினார். Chat-GPT போன்ற தளங்கள் பற்றியக் கவலை அதிகரிக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவு ஆயுதப் போட்டியில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

-sm