மியன்மாரில் கிராமத்தைத் தீவைத்துக் கொளுத்திய ராணுவம்

மியன்மார் ராணுவம் யங்கூன் அருகில் ஒரு கிராமத்தைத் தீவைத்துக் கொளுத்தியதாக உள்ளூர் ஊடகம் தகவல் அளித்துள்ளது.

2 பிள்ளைகள் உட்பட பொதுமக்களில் 22 பேர் மாண்டதாக அது தெரிவித்தது.

கருகிய சடலங்களைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆசியான் தலைவர்கள் இந்தோனேசியாவில் சந்திப்புகளை நிறைவுசெய்த வேளையில் பகோவில் அந்தச் சம்பவம் நேர்ந்தது.

மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகக் குறைவான முன்னேற்றம் இருந்தாலும், அதனைக் கைவிடப் போவதில்லை என ஆசியான் தலைவர்கள் உறுதிகூறினர்.

முன்னதாக, மியன்மாரின் மத்தியப் பகுதியில் ஒரு பள்ளியில் ராணுவம் ஆகாயத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன்னரே 300க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறியதால் உயிருடற்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

 

-sm