ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்கு எதிராகப் பன்றிகளுக்குத் தடுப்பூசியை உருவாக்கும் இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஆகப்பெரிய பன்றிப் பண்ணையில் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பன்றிகளுக்குத் தடுப்பூசியை அந்நாடு உருவாக்குகிறது.

அது பன்றிக் காய்ச்சல் கிருமிக்கு எதிராகப் பன்றிகளுக்குத் தற்காலிக நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் என்று நம்பப்படுகிறது. ரியாவ் தீவுகளில் (Riau Islands) உள்ள புலாவ் புலான் (Pulau Bulan) தீவிலிருந்து ஓர் ஆண்டில் சுமார் 240,000 பன்றிகள் சிங்கப்பூருக்கு விநியோகம் செய்யப்பட்டதாகத் தீவின் விவசாய அமைப்பு தெரிவித்தது.

இந்தோனேசியாவின் மொத்த பன்றி இறைச்சி விநியோகத்தில் அது சுமார் 15 விழுக்காடு. புலாவ் புலான் பன்றி இறைச்சியில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கிருமி இருப்பதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு சென்ற மாதம் 20ஆம் தேதி தெரிவித்தது.

தற்போது பண்ணையில் உள்ள நிலவரம் கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பன்றிகள் இறந்த  பிறகும் அவற்றின் இறைச்சியில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கிருமி இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

 

-sm