ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நேட்டோ கூட்டணியில் சேர்வதற்குத் தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஜப்பான் அதிகாரப்பூர்வப் “பகுதி-உறுப்பினராகவும்” நேட்டோ கூட்டணியில் சேராது என்று அவர் சொன்னார.
தலைநகர் தோக்கியோவில் தொடர்பு அலுவலகம் ஒன்றை அமைக்க நேட்டோ கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது. அதுபோன்ற அலுவலகம் முதன்முறையாக ஆசியாவில் அமைக்கப்படவிருக்கிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று திரு. கிஷிடா தெரிவித்தார். ஒரு தனிநபர் அலுவலகத்தை அமைக்க கூட்டணி முன்மொழிந்திருக்கிறது.
வட்டாரத்தில் உள்ள தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலந்து உள்ளிட்ட முக்கியப் பங்காளிகளுடன் நேட்டோ அவ்வப்போது ஆலோசனை நடத்த அலுவலகம் உதவியாக இருக்கும்.
ஜனவரியில் திரு. கிஷிடாவும் நேட்டோக் கூட்டணித் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்கும் (Jens Stoltenberg) சந்தித்தபோது அந்த யோசனை பற்றி முதன்முதலாகக் கலந்துபேசப்பட்டது.
-sm