திவாலானதில் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம்

“அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்”, பெண்களை விட அதிகமான ஆண்கள் திவாலாகி உள்ளனர் என்று அஸ்லினா ஓஸ்மான் இன்று மக்களவையில்  கூறினார்.

இன்று திவால் சட்டத்தின் திருத்தங்கள் மீதான விவாதத்தை நிறைவு செய்த அஸலினா, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறினார்.

“2019 முதல் 2023 வரை, 25 வயதுக்குட்பட்ட 107 பேர் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

“பெரும்பாலானவர்கள் 35 மற்றும் 44 வயதுடையவர்கள். 2019 முதல் 2023 வரை, இந்த வயதினரில் 13,073 திவாலானவர்கள் உள்ளனர்.”

5,297 திவாலானவர்கள் 55 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

பெண்களை விட அதிகமான ஆண்கள் திவாலாகி இருப்பதாக கூறினார்.

ஆண் திவாலாவதற்குப் பலதார மணம் ஒரு காரணம் அல்ல என்றார்.

“2019 மற்றும் 2023 க்கு இடையில், 8,912 பெண்களுடன் ஒப்பிடும்போது 25,104 ஆண்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டனர்.”