இண்ட்ராப்: ஒரே வாரத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன

ஒரு வார காலத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன என்று இண்ட்ராப் இயக்கம் கூறியுள்ளது.

அவை: கெடா, பத்து பெகாகாவிலுள்ள ஸ்ரீ காளியம்மன் இந்து கோயில், காப்பாரில் இரண்டு கோயில்கள் – ஓம் ஸ்ரீ காளியம்மன் கோயில் மற்றும் பெயரற்ற ஒரு கோயில், மற்றும் கோலாலம்பூரில் ஸ்ரீ முனேஸ்வரரர் கோயில்.

இக்கோயில்கள் இம்மாதம் 23-27 தேதிகளுக்கிடையில் உடைக்கப்பட்டன என்று அவ்வியக்கத்தின் அரசியல் கட்சியான மனித உரிமை கட்சியின் (HRP) தகவல் பிரிவு தலைவர் எஸ். ஜெயதாஸ் தொடர்பு கொண்ட போது கூறினார்.

“நாங்கள் கதை கட்டவில்லை. அது குறித்து மக்கள் ஓசையும் நண்பனும் இச்செய்திகளை வெளியிட்டுள்ளன”, என்றாரவர்.

மிக அண்மையப் புகார் ஸ்ரீ முனேஸ்வரரர் கோயிலை கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) ஒரு தனிப்பட்ட நிலச் சொந்தக்காரருடன் “இணைந்து” சிகாம்புட் அமன், கோலாலம்பூரில் “டிசம்பர் 27 இல் அல்லது ஏறத்தாழ அதே காலத்தில் உடைக்கப்பட்டது.

அக்கோயில் ஒரு தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த போதிலும், டிபிகேஎல் அதில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து இண்ட்ராப் கேள்வி எழுப்பியது. அந்த ஐம்பத்தைந்து ஆண்டுகால கோயிலை உடைப்பதற்கு உயர்நீதிமன்ற ஆணை இருக்க வேண்டும் என்பது சுட்டிக் காட்டப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புரிந்துள்ளதாக கூறப்படும் “அதிகார அத்துமீறல்” குறித்து மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று ஜெயதாஸ் கூறினார்.

கோயில் உடைக்கப்பட்ட அன்றைய தினமே அக்கோயில் பக்தர்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

பக்தர்கள் செய்துள்ள போலீஸ் புகார்படி, “அரசமைப்புச் சட்டம் பிரிவு 11 க்கு முரணாக இந்து தெய்வச் சிலைகள் சுத்திகளால் அடித்து தூள்தூளாக நொறுக்கப்பட்டன.”

அந்தக் கோயில் முன்பு அமைந்திருந்த நிலத்தை திரும்பப் பெற்று கோயில் அங்கு நிரந்தரமாக அமைவதற்க அந்நிலத்தை அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இண்ட்ராப் கோருகிறது.

மேலும், அக்கோயிலை உடைப்பதற்கு பொறுப்பான டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு ரிம1 மில்லியன் இழப்பீடாக தர வேண்டும் என்றும் இண்ட்ராப் கோருகிறது என்றாரவர்.

TAGS: